Sivakarthikeyan in Singapaathai

ரஜினி பட டயலாக் காப்பியடித்து அதனை தன்னுடைய அடுத்த படத்தின் டைட்டிலாக மாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan in Singapaathai : தமிழ் சின்னத்திரையில் சாதாரண இன்னிக்கி ஆர்ட்டிஸ்டாக பயணத்தைத் தொடங்கி தொகுப்பாளராக காமெடி நடிகராக வலம் வந்து தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அதுக்குதான் அட்லீயின் உதவி இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் டான் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அட்லியின் இன்னொரு உதவி இயக்குனரான அசோக் என்பவர் இயக்கத்தில் சத்தமில்லாமல் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ரஜினி பட டயலாக்கில் இடம்பெறும் இந்தப் பாதை என்ற வார்த்தையை டைட்டிலாக வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இனி நான் போக போற பாதை சிங்க பாதை என டயலாக் பேசுவார். அதிலிருந்து இந்த வார்த்தையை படத்தின் டைட்டிலாக தேர்ந்தெடுத்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது.