RRR பட விழாவில் சிவகார்த்திகேயன் செய்த செயல் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

Sivakarthikeyan in RRR Movie Promotion : தென்னிந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் RRR. தமிழகத்தில் இந்த படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

RRR படக் குழுவினருடன் இணைந்து சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் டிரம்ஸ் இசை கலைஞரை மறைத்துக் கொண்டு நிற்க அதனை சுட்டிக்காட்டி அவர்களும் கேமராவில் தெரியும்படி செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் சுட்டிக் காட்டிய பிறகு தொகுப்பாளர்கள் அவர்களை அறிமுகப்படுத்தினர். இந்த வீடியோவை சமூக வலைத் தளங்களில் ஷேர் செய்து ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனை பாராட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.