நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். தற்போது ஹீரோ தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வரும் பிரபலமாக திரையுலகில் ஜொலித்து வருகிறார்.

பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. யார் அவர் தெரியுமா?

இவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தை தொடர்ந்து வரும் அக்டோபர் 21ஆம் தேதி பிரின்ஸ் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை கடந்து இவரது நடிப்பில் மாவீரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படி அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. யார் அவர் தெரியுமா?

சாதாரண ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நடராஜன் எப்படி கிரிக்கெட் விளையாட்டில் அறிமுகமாகி ஐபிஎல்லில் கலக்கினார்? அவர் கடந்து வந்த பாதைகளை விவரிக்கும் விதமாக இந்த படம் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இருந்த போதிலும் நடராஜன் வாழ்க்கை வரலாறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.