Sivakarthikeyan in Doctor Movie Release
Sivakarthikeyan in Doctor Movie Release

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் OTTல் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan in Doctor Movie Release : தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்து இருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் டாக்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கே கே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தவற விட்டு செம ஹிட்டான திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?? – ச்சே இதெல்லாம் மிஸ் பண்ணிட்டாரே.!

ஏற்கனவே படத்தின் பாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஹிட்டடித்த வருகின்றன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலை தொடர்ந்து கொண்டே இருப்பதால் இந்த டாக்டர் படத்தையும் OTT வழியாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.

இது சிவகார்த்திகேயன் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் உண்மை என்ன என்பதை படக்குழு அறிவிக்கும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.