Sivakarthikeyan in Beast Movie

பீஸ்ட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாட்டு எழுதுவது மட்டுமல்லாமல் பாட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Sivakarthikeyan in Beast Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஒலிம்பிக் போட்டியில் இனி, கிரிக்கெட்டும் சேர்ப்பு.. ஐசிசி ஏற்பாடு..

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். யோகி பாபு, விடிவி கணேஷ் இயக்குனர் செல்வராகவன் டான்சிங் ரோஸ் சபீர் என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

Web Series முழு நீள திரைப்படமாகிறதா..?? Director Karthick Nareen Opens Up! | Project Agni | Navarasa

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்திற்கு பாடல் ஒன்றை எழுதி இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. தற்போது கிடைத்துள்ள கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலையும் பாட உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.