Sivakarthikeyan in Ayalan Movie Update

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Sivakarthikeyan in Ayalan Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அயலான் மற்றும் டாக்டர் என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

அயலான் திரைப்படத்தை நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வருகிறார். கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

மேலும் கருணாகரன், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் துவங்கியுள்ளன.

இதுகுறித்து கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அயலான் படத்தின் லாஸ்ட் அண்ட் பைனல் ஷூட்டிங் தொடங்கி விட்டதாக அறிவித்துள்ளனர்.