Sivakarthikeyan Hero Movie Issue in Amazon
Sivakarthikeyan Hero Movie Issue in Amazon

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை வெளியிட்டு நீக்கியுள்ளது அமேசான் நிறுவனம்.

Sivakarthikeyan Hero Movie Issue in Amazon : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஹீரோ.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியாகி எதிர்பாராத தோல்வியை சந்தித்த இப்படத்தின் கதை காப்பியடிக்கப்பட்ட தாக்க துணை இயக்குனரான போஸ்கோ என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நடிகையிடம் தரக்குறைவாக நடந்த அட்லீ, போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த புகார்.!

இந்த வழக்கு தற்போது வரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அமேசான் இணையதளத்தில் இப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது.

துணை இயக்குனரான போஸ்கோ இப்படத்தின் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது படத்தை ரிலீஸ் செய்வது நியாயமா என கேட்டு அமேசான் நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இதனால் அந்நிறுவனம் ஹீரோ படத்தை இணையத்தில் இருந்து நீக்கி விட்டது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.