கொட்டுக்காளி படத்தின் ட்ரைலர் அப்டேட்டை கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திரைப் பயணத்தை தொடங்கி ஹீரோவாக மாஸ் காட்டி வருபவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் கொட்டுக்காளி என்ற படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக உள்ளது.
பி.எஸ் வினோத் ராஜ் இயக்க, இந்த படத்தை எஸ்கே புரொடக்ஷன் தயாரித்துள்ளது. சமீபத்தில் சூரி இந்த படத்தின் சுவாரசியங்களை பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்ட நிலையில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஒரு விருந்தாக இந்த படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே புரொடக்ஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் பதிவு இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.