நடிகர் சிவகார்த்திகேயன் தனியார் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது கொரியன் திரைப்படங்களை குறித்து நகைச்சுவையாக பேசிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக தற்பொழுது திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். மெரினா திரைப்படத்தின் மூலம் திரைப்பயணத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் தற்பொழுது உச்ச நட்சத்திரத்தில் ஒருவராக திகழ்ந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் சேர்த்து வைத்திருக்கிறார்.

புதிய சர்ச்சையில் சிவகார்த்திகேயன்!!… கொரியன் சீரிசை கலாய்த்த வீடியோ வைரல்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதிலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இணைந்து தமிழும், கொரியன் மொழியும் கலந்து பேசிய காமெடி காட்சி மிகவும் பிரபலமானது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனியார் பள்ளி ஒன்றினுக்கு சிறப்பு விருந்தினராக சென்று இருக்கிறார். அப்பொழுது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் அப்படத்தில் இடம்பெற்று இருந்த அந்த நகைச்சுவையான காமெடியை பேசி பள்ளி மாணவ மாணவிகளை சிரிக்க வைத்துள்ளார்.

புதிய சர்ச்சையில் சிவகார்த்திகேயன்!!… கொரியன் சீரிசை கலாய்த்த வீடியோ வைரல்.

மேலும் அவர் நமக்கு கொரிய மொழியில் தெரிந்தது எல்லாம் ‘இதாக்கோ அனுப்ச்சான் என்பதுதான் என்று கூறியுள்ளார். அதன் பிறகு கொரிய மொழி திரைப்படங்களில் எல்லோரும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள். அதில் ஹீரோ யாரு, ஹீரோயின் யாருன்னு யாருக்கும் தெரியாது என்று கிண்டலாக பேசியுள்ளார். இவரது இந்த மேடைப்பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, பள்ளி மாணவர்கள் முன்பு இப்படி கொரிய மொழி படங்களை இழிவாக பேசலாமா என சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழப்பட்டு வருகிறது. மேலும் அவரது அந்த மேடைப்பேச்சின் வீடியோவும் வைரலாகி வருகிறது.