நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்திருக்கும் குடும்ப புகைப்படம் இணையத்தில் அதிக லைக்குகளை பெற்றுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் பல ரசிகர்களின் இதயத்தை வென்று உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்து வருகிறார்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அண்மையில் சிவகார்த்திகேயன் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

அப்புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆரத்தி, மகள் ஆராதனா மற்றும் மகன் குகன் தாஸ் இடம்பெற்றிருந்தனர். இதில் மகன் குகன் தாசின் முகத்தை சிவகார்த்திகேயன் முதன்முறையாக வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் பகிர்ந்திருந்த குடும்ப புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்குகளை குவித்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.