Sivakarthikeyan completes Mr Local shooting
Sivakarthikeyan completes Mr Local shooting

Sivakarthikeyan completes Mr Local shooting :

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்துக்காக அழகை பறிகொடுக்கும் சாய் பல்லவி – உண்மையிலேயே நீங்க சூப்பர்!

மேலும் ஹிப் ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

முன்னதாக இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் காரணம் ஏதும் சொல்லாமல் மே 17ம் தேதிக்கு இப்படம் தள்ளிபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இப்படத்தில் பாக்கி இருந்த சில காட்சிகளை படக்குழு படமாக்கினர். அதே நாளில் அந்த காட்சிக்கான டப்பிங் பணிகளையும் முடித்து ஒரேடியாக தற்போது படத்தை முடித்துவிட்டார்கள்.

இந்நிலையில் கடைசிநாள் படப்பிடிப்பில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இதைதொடர்ந்து படம் மே 17-ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.

இதைதொடர்ந்து அதே வேகத்தோட இரும்புத்திரை புகழ் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில ஹீரோ படத்தில நடிச்சிட்டு வர்றாரு.

இந்த படம் இப்போ இறுதிகட்டத்த எட்டியிருக்க நிலையில அடுத்ததா பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்ப தொடங்க சிவகார்த்திகேயன் திட்டமிட்டிருக்காரு.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.