அடாது மழையிலும் விடாமல் தன் படத்திற்கு டப்பிங் பேசி கொடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan Completes Dubbing for Don Movie : தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான டாக்டர் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

2-வது நாளாக, பத்ம விருதுகள் : பிரதமர் முன்னிலையில், ஜனாதிபதி வழங்கினார்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தினை சிவகார்த்திகேயன் மற்றும் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தனர். 25 நாளில் இந்த படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் 100 கோடி வசூல் செய்த முதல் திரைப்படமாக டாக்டர் இடம் பிடித்துள்ளது.

ஒரே அடிதான் உனக்கு.., Anchor-ஆல் கடுப்பான KPY Dheena..! | Velavan Stores | Fun Shopping | T Nagar HD

இந்தப் படத்தைத் தொடர்ந்து சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் தான் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்து விட்ட நிலையில் இந்த அடாத மழையிலும் விடாது டான் படத்திற்கு டப்பிங் பேசி கொடுத்துள்ளார்.

டான் படத்திற்கு டப்பிங் பேசிய புகைப்படத்தை வெளியிட்டு படம் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படம் பற்றிய இவருடைய பதிவு சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.