சிவகார்த்திகேயன் மற்றும் சிபி சக்கரவர்த்தி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் இருந்து முன்னணி நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் இவரது நடிப்பு இறுதியாக வெளியான அயலான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவரது நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
குறிப்பாக இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலால் ரசிகர்களிடையே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.