அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதர்வா தற்போது ‘8 தோட்டாக்கள்’ படத்தின் இயக்குனரான ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘குருதி ஆட்டம்’. இதில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தை ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.இப்படம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்ததை தொடர்ந்து இப்படத்திற்கான ட்ரெய்லர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்து முடித்த நடிகர் சிவகார்த்திகேயன் அதர்வா, இயக்குனர் ஸ்ரீ கணேஷ், தயாரிப்பாளர் முருகானந்தம் மற்றும் படக்குழுவினர்கள் அனைவரையும் மகிழ்ச்சியோடு பாராட்டியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.