sivakarthikeyan and wife latest update
sivakarthikeyan and wife latest update

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். மேலும் சாய் பல்லவி, ராகுல் போஸ்,மீர் சல்மான், ஸ்ரீகுமார் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மனைவியுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் க்யூட் பேர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.