Aishwarya Rajesh
Aishwarya Rajesh

Aishwarya Rajesh :

தமிழ் சினிமாவில குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகனா உருவெடுத்தவரு சிவகார்த்திகேயன்.

வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த 2.0 பிரபலம் – அதிரவைக்கும் மெகா கூட்டணி!

அண்மையில மிஸ்டர் லோக்கல் படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், அதே வேகத்தோட இரும்புத்திரை புகழ் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில ஹீரோ படத்தில நடிச்சிட்டு வர்றாரு.

இந்த படம் இப்போ இறுதிகட்டத்த எட்டியிருக்க நிலையில அடுத்ததா பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்ப தொடங்க சிவகார்த்திகேயன் திட்டமிட்டிருக்காரு.

இன்னும் ஓரிரு நாள்ல படப்பிடிப்பு தொடங்கவிருக்க நிலையில இந்த படத்தில யார் யார் நடிக்கிறாங்கங்கற தகவல படக்குழு இப்போ வெளியிட்டிருக்காங்க.

தமிழ்ல துப்பறிவாளன் படம் மூலமா அறிமுகமான அனு இமானுவேல் இந்த படத்தில சிவகார்த்திகேயன் ஜோடியா நடிக்கிறாங்க.

சிவகார்த்திகேயன் படத்தில் இப்படியொரு ரோலில் நடிக்கிறாரா ஐஷ்வர்யா ராஜேஷ்?

அனு இமானுவேல் இந்த படத்தில நாயகியா நடிச்சாலும் இந்த படத்தில ஹீரோவுக்கு அடுத்தபடியா முக்கியமான ஒரு ரோல்ல ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்காங்க.

ஏற்கனவே கனா படத்தில சேர்ந்து நடிச்ச சிவகார்த்திகேயன் – ஐஷ்வர்யா ராஜேஷ் கூட்டணி இந்த படத்தில அண்ணன் – தங்கையா நடிக்க இருக்காங்க.

இவங்க போக யோகி பாபு, சூரின்னு ரெண்டு காமெடி நட்சத்திரங்கள் இந்த படத்தில இணைஞ்சிருக்காங்க.

கடைசியா பாண்டிராஜ் இயக்கத்தில வெளியான கடைக்குட்டி சிங்கம் படம் கிராமத்த மையப்படுத்தி பெரியளவில வெற்றிபெற்றிருந்த நிலையில இந்த படமும் அதே பாணியில உருவாகவிருக்கிறதா சொல்லப்படுது.