Sivakarthikeyan About Political Entry

அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு சிவகார்த்திகேயன் என்ன சொல்லியிருக்கார் பாருங்க.

Sivakarthikeyan About Political Entry : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர், அயலான் என்ற 2 திரை படங்கள் வெளியாக உள்ளது.

மேலும் லைகா புரொடக்சன் தயாரிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் திரை உலக பிரபலங்களில் பல பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதில் சிவகார்த்திகேயனும் ஒருவராக இருந்தார். தற்போது முதல்வரிடம் கலைமாமணி விருதை பெற்று விட்டு செய்தியாளர்களை சந்தித்து உள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது பத்திரிகையாளர் ஒருவர் “அரசியலுக்கு வருவீர்களா” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அதற்கு சிவகார்த்திகேயன் சிரித்துக்கொண்டே நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்ற பதிலைக் கூறினார்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.