கொட்டு காளி படம் வெற்றி பெற்றால் என்ன செய்யப் போகிறார் என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக வளர்ந்தவர் சூரி. இவரது நடிப்பில் கொட்டுக்காளி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்திலும், எஸ்.கே புரொடக்ஷன் தயாரிப்பிலும், ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் படம் ஹிட்டு கொடுத்தால் என்ன செய்யப் போகிறார் என்று கூறியுள்ளார்.
அதாவது, முதலீட்டை விட லாபம் வந்தால் அதை இயக்குனர் வினோத்துக்கு அடுத்த படத்திற்காக முன்பணமாக கொடுப்பேன். இது மட்டுமில்லாமல் அதிகமாக லாபம் வந்தால் வினோத் போன்ற இரண்டு இளம் இயக்குனர்களுக்கு முன்பணம் கொடுப்பேன். எனக்கு வாழ்க்கை கொடுத்த இந்த சினிமாவிற்கு என்னால் முடிந்த சிறு உதவி இது என்று சொல்லியிருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் இந்த பேச்சு ரசிகர்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.