ஆடியோ லாஞ்சில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனின் புகைப்படங்கள் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவர் பிரின்ஸ் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தீவிரமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நேற்றைய தினம் நடைபெற்ற ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இருக்கும் ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்து இருந்த பல சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் ஸ்மார்ட்டான லுக்கில் கலந்து கொண்டு இருந்த சிவகார்த்திகேயனின் க்யூட்டான புகைப்படங்களும் ட்ரெண்டிங்காகி வருகிறது.