சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் இரண்டாவது முறையாக நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் SK 13 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாக்கி வைரலாகி வருகிறது.

திரையுலகில் சாதாரண மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய பயணத்தை தொடங்கி தொகுப்பாளர், துணை நடிகர் என பல நிலைகளை தாண்டி இன்று முன்னணி நடிகராகி இருப்பவர் சிவா.

இவர் தற்போது நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

எம்.ராஜேஷ் இயக்கி வரும் படத்தில் சிவாவுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் ராதிகா சரத்குமார் நடித்து வருகிறார்.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்

சிவகார்த்திகேயன்