சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ சங்கர் இணைந்து பேசி இருந்த ஒரு காமெடி கிளிப்ஸ் ரிலீஸ் வீடியோவாக தற்போது வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளி திரையில் மாபெரும் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ சங்கர். இருவருமே முதல் முதலில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார்கள் அதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பல காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் ஃபேவரிட் நட்சத்திரங்களாக இடம் பிடித்திருந்தனர்.

பழசா இருந்தாலும் செம காமெடியா இருக்கு!!… சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ சங்கரின் ரிலீஸ் வீடியோ வைரல்!.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் “அது இது எது” என்ற பிரபல நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியபோது சிரிச்சா போச்சு என்கின்ற ரவுண்டில் ரோபோ சங்கரிடம் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு மிகவும் நகைச்சுவையான பதிலை அளித்த ரோபோ சங்கரின் வீடியோ பதிவு தற்பொழுது ரீல்ஸ் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியுள்ளது.

பழசா இருந்தாலும் செம காமெடியா இருக்கு!!… சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ சங்கரின் ரிலீஸ் வீடியோ வைரல்!.

அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் இடம் நான் ஏதாவது உன்னை கேள்வி கேட்கட்டுமா எனக் கேட்டு எந்த டேல பிறந்த நீ ? எனக் கேட்டுள்ளார். அதற்கு ரோபோ சங்கர் நான் வந்து வெட்னென்ஸ் டே, நீ? என ரோபோ சங்கர் சிவகார்த்திகேயனிடம் கேட்டுள்ளார். அதற்கு சிவகார்த்திகேயன் நான் வந்து ஞாயிற்றுக்கிழமைல பிறந்தேன் என சொல்லி உள்ளார் அதற்கு ரோபோ சங்கர் லூசு ஞாயிற்றுக்கிழமை லீவு என பங்கமாக கலாய்த்து உள்ளார். அந்த காமெடியான வீடியோ கிளிப்ஸ் ரீல்ஸ் வீடியோவாக ரசிகர்களின் மத்தியில் தற்பொழுது வைரல் ஆகியுள்ளது.