
தமிழ் திரையுலகில் ஹீரோ, வில்லன் குணசித்திர கேரக்டர்களில் நடித்த நடிகர் சுமனின் பழைய திருமண புகைப்படங்கள் தற்போது திடீரென இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ், தெலுங்கு முன்னணி நடிகராக இருந்து வருபவர் சுமன் என்பதும் பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருக்கிறார் என்பதும் தெரிந்ததே. இவர் கடந்த 80 ஆம் ஆண்டு ’இளமை கோலம்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி, அதன் பிறகு ’எல்லாம் இன்பமயம்’ ’டார்லிங் டார்லிங் டார்லிங்’ உட்பட பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்தார்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த சுமன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ திரைப்படத்தில் வில்லனாக கலக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சுமன், சிரிஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

நடிகர் சுமன் திரையுலகில் மட்டுமின்றி அரசியலில் ஈடுபட்டார் என்பதும் கடந்த 1999 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த இவர் அன்றைய முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு நம்பிக்கையுடன் இருந்தார் என்பதும், தற்போது அவர் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.