அஜித்தை வைத்து வீரம் விசுவாசம் என மூன்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த சிவா தான் இந்த டைட்டிலை அஜித்திடம் சொன்னாராம்.
Siva suggests Nerkonda Paarvai Title :
விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.
இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.
முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
வெள்ளித்திரையில் இடம் பிடிப்பாரா ரியோ? – நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்.!
இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை யார் சொன்னது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
அஜித்தை வைத்து வீரம் விசுவாசம் என மூன்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த சிவா தான் இந்த டைட்டிலை அஜித்திடம் சொன்னாராம் இந்த டைட்டில் வினோத்துக்கும் பிடித்துப்போக பின்னர் இதையே படக்குழு ஒருமனதாக இறுதி செய்துள்ளனர்.