Siva Shankar Master in Health Status Update

குடும்பமே ஐசியூவில் தான் இருக்கோம் என சிவசங்கர் மாஸ்டர் அவர்களின் இளைய மகன் தெரிவித்துள்ளார்.

Siva Shankar Master in Health Status Update : தமிழ் சினிமாவில் மன்மதராசா உள்ளிட்ட பல்வேறு பாடல்களுக்கு நடன மாஸ்டராக வரும் சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவசங்கர் மாஸ்டர்.

இவர் குடும்பத்தோடு ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் கொரோனாவில் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இவரது உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் இவருடைய இளைய மகன் மேலும் சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். அப்பாவின் நுரையீரல் கடுமையாக பாதித்து விட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கிறார்கள். ஒரு நாளைக்கு ரூபாய் 2.5 லட்சம் செலவாகிறது. திரையுலகினர் இடம் உதவி கேட்டுள்ளோம். அவர்கள் உதவினால் தான் இனி மருத்துவ செலவை சமாளிக்க முடியும்.

மனிதரின் இயல்பை புரிந்து கொள்.!

அப்போ மட்டுமல்ல அண்ணன், அம்மா என எல்லோரும் மருத்துமனையில் ஐசியூவில் தான் உள்ளோம். கொரோனா தடுப்பு ஊசி இரண்டாவது டோஸ் போட்ட பிறகு காய்ச்சல் வந்தது. காய்ச்சல் குறையாததால் பரிசோதனை செய்ததில் அனைவருக்கும் கொரானா இருப்பது உறுதிசெய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.

ரொம்ப ஒரு இயல்பான நடிகர் Durai Sudhakar – புகழ்ந்து தள்ளிய Blue Sattai Maran | Anti Indian