Siva Rajini Combo Update : A Massive Information is Here | Thala Ajith | Siruthai Siva | Super Star Rajinikanth | Tamil Cinema news
சிவாவும் ரஜினியும் இணைய உள்ள படத்தின் இசையமைப்பாளர் யாராக இருக்கும் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

Siva Rajini Combo Update : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தர்பார் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை முருகதாஸ் இயக்கி வருகிறார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை அடுத்து ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை போன்ற படத்தில் விஜய் நடிக்க பயப்படுவது இதனால் தான் – பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு.!

இதனை ஓரளவிற்கு உறுதி செய்யும் விதமாக சிறுத்தை சிவாவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்திருந்தார். இந்நிலையில் தற்போது இவர்களும் இணைந்தால் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பார் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன.

ஒரு வேலை ரஜினி, சிறுத்தை சிவா மற்றும் யுவன் இணைந்தால் இது பக்காவான கூட்டணியாக இருக்கும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.