Lord Sihivan

● சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அதிலும் சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது.

● ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவபூஜை செய்த பலனை உண்டாக்கும். ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால், சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது.

● சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற, ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

● ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், 5 வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.

● மகா பிரதோஷ பலன்:
அறிந்தோ அறியாமலோ மது, மங்கை, கொள்ளை, பொய் கூறுதல் ஆகியவற்றினால் பல்வேறான பாவங்கள் இழைத்துவிட்டால் மகா பாதகம் ஏற்படும்.

● இந்த பாதகத்தை துடைத்து நன்னெறி அடைய சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தன்று, முழு உபவாசம் இருந்து பிரதோஷ நேரத்தில் வழிபட பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம் ஆகும்.

● பாவம் செய்தவர் திருந்திவிட்டார்
என்றாலே, பாவங்கள் படிப்படியாக குறையும் என்பது ஐதீகம். ஆனால் பிரதோஷ விரதம் இருந்து வழிபட்டால், பாவங்கள் அனைத்தும் விலகும். மேலும் ஒருவருடம் கோவிலுக்கு சென்ற பலனும் கிடைக்கும்.

● சிவவழிபாடு
சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம், அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி, அதனினும் சிறந்தது பிரதோஷம், பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். அனைத்திற்கும் மேலாக பிரதோஷ விரதம் மேற்கொள்பவர்கள் முத்தி நிலையை அடையும் பாக்கியத்தை பெறுகிறார்கள்.

● விரதம் இருக்கும் முறை:
பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி, திருநீறணிந்து, சிவன் நாமத்தை ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் வைபவம் முடியும் வரை, உணவைத் தவிர்த்து, பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு, விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம்.

● இவ்வாறு பிரதோஷ விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால், நாம் இறைவனிடத்தில் வைக்கின்ற கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இவ்வகையில் சனி மஹா பிரதோஷம் நாளில் சர்வேஸ்வரனாகிய இறைவனை வணங்குவோம். சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு புண்ணியம் நிறைந்த பெரு வாழ்வு பெறுவோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here