Siva and Suriya Movie Issue
Siva and Suriya Movie Issue

சிறுத்தை சிவா மீது சூர்யா செம கடுப்பில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

Siva and Suriya Movie Issue : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் லாக் டவுன் முடிந்ததும் திரைக்கு வரவுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. மேலும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

மீண்டும் தள்ளிபோனது மாஸ்டர் ரிலீஸ்… இந்த தினத்தில் தான் வெளியாகிறது, வெயிட் காட்டத் தயாரா?? – லேட்டஸ்ட் தகவல்கள் இதோ.!

ஆனால் அதன் பின்னர் இதே கால்ஷீட்டில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.

சூர்யாவும் சிறுத்தை சிவாவும் இணைய இருப்பதாக கூறப்பட்ட இருந்த அந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. சிறுத்தை சிவா வாண்ட்டடாக வந்து சூர்யாவிடம் கதை கூறியுள்ளார். சூர்யாவுக்கும் இந்த கதை பிடித்து உள்ளது.

வெற்றிக்காகப் போராடி வரும் தனக்கு இப்படம் கைகொடுக்கும் என அவர் முழு மனதார நம்பியுள்ளார். ஆனால் சிறுத்தை சிவா ரஜினியின் அண்ணாத்த படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும் இந்த படத்தை ஓரங்கட்டி உள்ளார்.

இதனால் சூர்யாவிற்கு சிவாவின் மீது இருந்த நம்பிக்கை குறைய தொடங்கியது மட்டுமல்லாமல் அவர் மீது கோபம் அதிகமாகிவிட்டது. இதன் காரணமாகவே அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருந்த கால்சீட்டை ஹரி அவர்களுக்கு கொடுத்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் விவரம் அறிந்தவர்கள் முனுமுனுத்துக் கொள்கின்றனர்.

புதிய படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பை வெளியிட்ட சூர்யா – கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி வைத்து உருவான சிறுத்தை என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

இப்படத்திற்கு பிறகு அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என நான்கு படங்களை இயக்கினார். அஜித்தின் ஆஸ்தான இயக்குனராகவும் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.