Sitting Tips :
Sitting Tips :

Sitting Tips :

‘கால்மேல் கால்’ போட்டு உட்கார்வதால் விளையும் தீமைகள், பற்றி தெரியுமா உங்களுக்கு?

* கால் மேல் கால் போட்டு உட்காராதே… இப்படி பெரியவர்கள் கூறுவதைப் பார்த்திருப்போம். பெரியவர்கள் எதிரில் அப்படி உட்கார்வது மரியாதை இல்லை என்ற நோக்கில் அப்படிச் சொன்னாலும், அதன் பின்னணியில் ஆரோக்கியம் சார்ந்த அறிவியல் இருப்பது ஆய்வில் அறியப்பட்டுள்ளது.

* கால்மேல் கால் போட்டு உட்கார்வதால் உடலின் கீழ் பகுதியை விட மேல் பகுதியில் ரத்த சுழற்சி அதிகமாக நடக்கின்றது. இதனால் இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

* அடிக்கடி காலை குறுக்கே போட்டு உட்கார்வதால் இடுப்பு எலும்புகளின் இணைப்பில் அழுத்தம் ஏற்பட்டு நரம்புகளை சுருக்குகிறது.

இதனால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு கால்களின் கீழ்ப்பகுதி நரம்புகளை வீக்கம் அடையச் செய்யும். இதுவே நாளடைவில் வெரிகோஸ் வெயின் எனப்படுகிற நரம்புப் பிரச்னை வரவும் வழிவகுக்கிறது.

* கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்பட காரணமாக உள்ளது.

* நீரிழிவுக்காரர்கள் கால் மேல் கால் போட்டு அமர்வதை அறவே தவிர்க்க வேண்டும்.

* 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் கால்களை குறுக்கே போட்டு உட்காரக்கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here