யூட்யூபில் கடும் போட்டி போட்டு வருகின்றனர் ரோஜா சீரியல் ஜோடிகள்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பான பிரபலமான சீரியல் ரோஜா. மதிய வேளையில் ஒளிபரப்பான இந்த சீரியல் அதன் பிறகு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியது.

இந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நாயகியாக நடித்த பிரியங்கா நல்காரி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சீதாராமன் என்ற சீரியலில் நடிக்க உள்ளார்.

அதேபோல் நாயகனாக நடித்த சிப்பு சூரியன் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இவர்களின் புதிய சீரியல் ப்ரோமோ வீடியோக்கள் நேற்று இணையத்தில் வெளியாகின.

பிரியங்கா நல்காரி நடிக்கும் சீதாராமன் ப்ரோமோ வீடியோ youtube டிரெண்டிங்கில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் சிப்பு சூரியன் நடிக்கும் பாரதிகண்ணம்மா சீசன் 2 சீரியல் ப்ரோமோ ட்ரெண்டிங்கில் 26 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

பாரதி கண்ணம்மா சீசன் 2 ப்ரோமோ வீடியோ 1.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற நிலையில் சீதாராமன் சீரியல் ப்ரோமோ 1.3 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.