Chiru Dhaniya Chutney

தேவையான பொருட்கள்:

கம்பு – 4 டேபிள்ஸ்பூன், கேழ்வரகு – 4 டேபிள்ஸ்பூன், தக்காளி – 5,
காய்ந்த மிளகாய் – 3,
மிளகு – 1 டீஸ்பூன், வெந்தயம் – சிறிதளவு, பெருங்காயம் – சிறிதளவு, நல்லெண்ணெய் – சிறிதளவு,
கடுகு – சிறிதளவு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு, கறிவேப்பிலை – ஒரு கொத்து,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
1) கடாயில் ஒரு கரண்டி எண்ணெயை ஊற்றி, மிளகாயை சிவக்க வறுத்து எடுக்க வேண்டும்.
2) பின் சிறு தீயில் கம்பு, கேழ்வரகு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்க வேண்டும்.
3) பின்னர் மேலும் சிறிது எண்ணை விட்டு பெருங்காயம் தக்காளியுடன் உப்பு சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்றாக குழைய வழங்கவேண்டும்.
4) வதங்கிய பின்னர் எடுத்து, வறுத்த எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
5) தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் கொட்டி கலந்து விட, சுவையான சிறுதானிய சட்னி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here