Siruthai Siva
தளபதி விஜயுடன் இணைவது குறித்து மேடை ஒன்றில் பேசியுள்ளார் சிறுத்தை சிவா.

தமிழ் சினிமாவில் சிறுத்தை படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கிவர் சிறுத்தை சிவா.

இவர் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினியை வைத்து தலைவர் 168 படத்தை இயக்கி வருகிறார். இது ஆக்ஷன் கலந்து மகிழ்ச்சியான குடும்ப திரைப்படம்.

இந்நிலையில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட சிவாவிடம் விஜயுடன் எப்போது கூட்டணி என கேட்டதற்கு விஜய் சார் என்னுடைய நண்பர். நிச்சயம் அவருடன் இணைந்து படம் பண்ணுவேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.