Sirukeerai Benefits : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Sirukeerai Benefits :

# சிறுகீரை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அது தரும் பலன்கள் பெரிதுதான். மிளகு, சீரகம், சோம்பு, தக்காளி, வெங்காயம் இவற்றோடு சிறுகீரையைச் சேர்த்து வேக வைத்து, சிறிது பருப்பையும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால், பித்தம், நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம் குறையும்.

# சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், இன்சுலின் இயல்பாக சுரக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

உங்கள் கல்லீரல், மண்ணீரல் வீக்கமும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்க, சில இயற்கை மருத்துவ டிப்ஸ்!

# அடிக்கடி சிறுகீரையோடு மிளகுத்தூள், உப்பு சேர்த்து சமைத்து சாதத்தில் சாப்பிட நினைவாற்றல் அதிகரிக்கும்.

# சிறுகீரையுடன் மிளகு, வெங்காயம், பூண்டு, மஞ்சள் சேர்த்து சூப் செய்து சாப்பிட கண் புகைச்சல் குறையும்.

# சிறுகீரையுடன், முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவ முகப்பரு குறையும்.

# அருகம்புல் வேர், சிறுகீரை வேர், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி பால், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரச, பாசான மருந்துகள் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நஞ்சுகள் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here