
உண்மைகளை தெரிந்து கொண்டு மிரட்டும் பிஏ-வால் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் முத்துவுக்கும் மீனாவுக்கும் இடையே நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ரோகினி பொய் சொல்லி மனோஜை திருமணம் செய்ய உள்ளார்.

இன்னும் ஓரிரு நாளில் இவர்களுக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில் பி ஏ ரோகிணியின் அம்மாவை பின் தொடர்ந்து ரோகிணி குறித்த எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்டு அவருக்கு போன் செய்து உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையே இருக்கு உன் பையன் பேரு கிருஷ் என அதிர்ச்சி கொடுக்கிறார்.

இதனால் ரோகினி உனக்கு என்னதான் வேணும் என கேட்க நீதான் வேண்டும் என சொல்ல சரி வரேன்னு கூறுகிறார். ரூமில் பி ஏ ரோகிணி என நினைத்து அருகில் நெருங்கி போய் தலையில் பூ வைத்து விட பிறகு அது அவருடைய மனைவி என தெரிய வருகிறது. அது மட்டுமல்லாமல் அங்கே அவனது மகனும் இருக்க அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.

வரும் நாட்களில் சதிகளை தாண்டி ரோகிணி எப்படி மனோஜை திருமணம் செய்ய போகிறார் என்பது தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.