ரோகினிக்கு விஜயா செக் வைக்க பி ஏ அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா ரூமில் முத்துவிடம் அத்தை ரொம்ப பாவம் அங்க ரொம்ப அழுது புலம்பிட்டு இருந்தாங்க என்று சொல்ல முத்து அவங்களா பாவம்? எவ்வளவு பெரிய வேலை பார்த்து இருக்காங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கம் விஜயா ஏதோ ஒரு தைரியத்துல சவால் விட்டுட்டு இப்போ பணத்துக்கு என்ன பண்றதுன்னு யோசித்துக் கொண்டிருக்க இங்கே மீனா பணத்தை எப்படி தருவாங்க ஒரு வேலை ரோகினி அப்பாகிட்ட கேப்பாங்களோ என்று பேசிக் கொண்டிருக்க அதை கேட்ட விஜயாவுக்கு இதே ஐடியா தோன்றுகிறது.
உடனே ரோகினியிடம் சென்று உன் அப்பா கிட்ட பணத்தை கேளுங்க இப்போ நம்முடைய மானத்தை காப்பாத்திக்க இத விட்டா வேற வழி கிடையாது என்று சொல்ல அதிர்ச்சி அடையும் ரோகிணி பிறகு வேறு வழி இல்லாமல் நான் பேசுகிறேன் என்று ஒப்புக்கொள்கிறார்.
அடுத்ததாக பியூட்டி பார்லர் வந்து ரோகிணி தன்னுடைய தோழியிடம் பணத்துக்கு என்ன பண்றதுன்னு தெரியல என்று புலம்பிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து பிஏ போன் செய்து என்ன ரோகிணி நான் தான் உன் தாய் மாமன் வசீகரன் பேசுகிறேன் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். நான் உன் வீட்டில் உண்மைய சொல்லாம இருக்கணும்னா இப்போ எனக்கு பணம் தரணும் மாச மாசம் 50 ஆயிரம் ரூபாய் பணம் தரணும் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
இப்போதைக்கு தன்னுடைய பியூட்டி பார்லர் கனவை விட இந்த வாழ்க்கையை காப்பாற்றுகிறது தான் முக்கியம் என்று ரோகிணி பியூட்டி பார்லரை வேறு ஒரு பிராண்டிற்கு மாற்ற முடிவு எடுக்கிறார். இது சம்பந்தமாக அவர்களைச் சென்று சந்திக்க 12 லட்சம் ரூபாய் பணத்தை தருவதாக சொல்ல ரோகிணியும் சம்மதம் தெரிவிக்கிறார். பிறகு தன்னுடைய தோழியிடம் இதுக்கெல்லாம் காரணம் அந்த மீனா தான் அவளை நான் சும்மா விடமாட்டேன் ஏதாவது ஒரு விஷயத்துல மாட்டட்டும் அப்போ இருக்கு அவளுக்கு என ஆவேசப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.