
முத்து சொன்ன வார்த்தையால் விஜயா ஷாக்காக ரோகினிக்கு பிபி ஏறி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து அண்ணாமலையிடம் ரவிக்கு பெண் பார்க்கும் விஷயம் குறித்து சொல்ல நாம பார்த்த பொண்ணுதான் செட் ஆகல அவதான் பார்த்தேன் என்று சொல்கிறாளே பாக்கட்டும் என கூறி விடுகிறார்.
மறுபக்கம் ஸ்ருதியின் அப்பா அம்மா கல்யாணத்துக்காக பேசி நாளைக்கு வீட்டுக்கு வருவதாக சொல்லி பிறகு ஸ்ருதியிடம் பொய் சொல்லி அவரை வர ஒப்புக்கொள்ள வைக்கின்றனர்.
அடுத்ததாக ரோகினி அம்மாவை பார்க்க சென்று இருக்க அங்கு வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி சொல்ல அவருடைய அம்மா நீ உன்ன பத்தி உண்மைகளை சொல்லிடு, முதல்ல கோபப்படுவாங்க அப்புறம் ஏத்துக்குவாங்க, நான் முத்து மீனா கிட்ட பேசவா அவங்களே உனக்கு உதவி பண்ணுவாங்க என்று சொல்ல ரோகிணி டென்ஷன் ஆகி சாப்பாட்டு தட்டை தூக்கி வீசுகிறார்.

மறுநாள் காலையில் ஸ்ருதி விருந்துக்காக மாடர்ன் உடையில் வர புடவையில் வருமாறு சொல்லி அவரை புடவை மாற்ற வைக்கின்றனர். இங்கே விஜயா ரவியை இன்னிக்கு வேலைக்கு போகாத லீவு சொல்லிட்டு என்று உன்ன பாக்குறதுக்காக பொண்ணு வீட்ல இருந்து வராங்க என்று சொல்ல ரவி அதிர்ச்சி அடைகிறார்.
ரவிக்கு பணக்கார வீட்ல பொண்ணு அமைந்தா இந்த வீட்டுல எனக்கு மரியாதை இருக்காது என மனோஜ் இவனுக்கு எதுக்கு பெரிய இடத்துல பொண்ணு பாக்கறீங்க? இவன் சாதாரண சமையல்காரன் தானே என்று சொல்ல முத்து சமையல் செய்வது அவ்வளவு ஈஸியான வேலை கிடையாது என மீனா சொன்ன டயலாக்குகளை எடுத்து விடுகிறார். அண்ணாமலையும் நீ செய்யுற வேலை மட்டுமே ஒசத்தி கிடையாது என மனோஜ்க்கு அறிவுரை வழங்குகிறார்.

பிறகு முத்து பொண்ணு யாரா வேணா இருக்கட்டும் ஆனால் அப்பாவை மதிக்கிற குடும்பமா இருக்கணும் என்று சொல்ல விஜயாவும் ரவியும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.