வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாக ஸ்ருதி அதிர்ச்சி கொடுக்க மீனா கண்டிஷன் போட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி மற்றும் பாட்டி என இருவரும் ஒன்று சேர்ந்து பழைய போட்டோக்களை பார்த்துக் கொண்டிருக்க ரவி டிரஸ் இல்லாமல் இருக்கும் போட்டோவை பார்த்து இதுல நீ க்யூட்டா இருக்க என்று சொல்லி ரவியை கலாய்த்து இது தான் டிபியா வைக்க போறேன் என்று சொல்ல ரவி வேண்டாம் என்று போனை புடுங்க முயற்சி செய்ய ஸ்ருதி சுத்தி சுத்தி வந்து விளையாட்டு காட்டுகிறார்
முத்து காரை தாறுமாறாக ஒட்டி கொண்டு வந்து வீட்டு முன்னாடி நிறுத்த அண்ணாமலை மற்றும் விஜயா இருவரும் இறங்கி உள்ளே வருகின்றனர். வீட்டுக்குள் வந்ததும் அண்ணாமலை விஜயா தண்ணி கொண்டா என்று சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். விஜயாவின் சந்தோஷப்பட்டு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அண்ணாமலை கழுத்தில் விஜயாவின் பொட்டு ஒட்டிக்கொண்டு இருப்பதை பார்த்து கலாய்க்க அண்ணாமலை வெட்கப்படுகிறார்.
அதன் பிறகு பாட்டி இதுக்கு முன்னாடி ஒருமுறை சண்டை போட்டு பேசாம இருந்தாங்க அப்போ நான் தான் வந்து சமாதானம் செஞ்சுட்டு போனேன். அடுத்த 10 மாசத்துல ரவி பிறந்துட்டான் என்று சொல்ல முத்து அப்படின்னா இன்னும் பத்து மாசத்துல எங்களுக்கு தங்கச்சி வரப் போதா என்று கிண்டல் அடிக்கிறார்.
அதைத் தொடர்ந்து ரூமுக்குள் பாட்டு கேட்டிருக்க ரவி ஓடி வந்து கட்டிப்பிடிக்க ஸ்ருதி கொஞ்ச நாளைக்கு என்னை தொடாத என்று திட்டுகிறார். மேலும் நான் குழந்தை பெற்றுக்க போறது கிடையாது என்று சொன்னதும் ரவி இரண்டு மூணு வருஷத்துக்கு தானே அது பரவால்ல என்று சொல்கிறார்.
ரெண்டு மூணு வருஷத்துக்கு இல்ல எப்பவுமே பெத்துக்க போறது இல்லை என்று அதிர்ச்சி கொடுக்கிறார். என்னால அந்த வலி எல்லாம் தாங்க முடியாது என்று சொல்கிறார். வேணும்னா வாடகைத்தாய் மூலமா குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்ல ரவி என்னதான் இருந்தாலும் நீ பெத்துக்கிற மாதிரி வராது என்று சொல்ல என்னால பெத்துக்க முடியாது என்று உறுதியாக சொல்கிறார்.
அடுத்து மொட்டை கடுதாசியால் மனோஜ் தூக்கம் வராமல் தவிக்க விஜயாவுக்கு போனை போட்டு எனக்கு தூக்கமே வரல வெளியே வாமா என்று சொல்லி கூப்பிட விஜயா வெளியே வர மொட்டை கடுதாசியை காட்டி எனக்கு என்னமோ பயமா இருக்கு என்று சொல்ல மாசம் ஐம்பதாயிரம் தரணும்னு புது கதையை ரெடி பண்றியா என்று திட்டுகிறார். இதனால் மனோஜ் எனக்கு யாரால பிரச்சனை வரப்போகுதுன்னு தெரிஞ்சு போச்சு உங்களால தான் என்று சொல்ல விஜயா மனோஜை போட்டு அடிக்கிறார். உனக்காக எவ்வளவு அசிங்கப்பட்டு நிற்கிறேன் நீ என்னையே சந்தேகப்படுறியா என்று கோபப்படுகிறார்.
அடுத்த நாள் காலையில் முத்துவுடன் கார் ஓட்டும் கார்த்தியை வீட்டுக்கு வர சொல்லி இருக்க கார்த்தி வந்ததும் இவன் தான் இன்னொரு காரை ஓட்ட போறான் என்று சொல்லி அண்ணாமலையிடம் சாவி கொடுத்து கொடுக்க சொல்கிறார். விஜயா ஆமா பெரிய ஏரோ பிளேனை வாடகைக்கு விடுறான் என்று நக்கலாக பேச அண்ணாமலை திட்டுகிறார். பிறகு மீனா பிரெண்டு எல்லாம் மத்த நேரத்துல தான் வேலைன்னு வரும்போது எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் நல்லபடியா கார் ஓட்டணும் என்று கண்டிஷன் போடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.