மீனாவின் அம்மா சொன்ன வார்த்தைகள் சத்யாவை போட்டு தாக்கியுள்ளார் முத்து.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவின் வீட்டுக்கு வர அப்போது அவருடைய அம்மா இப்படி முரட்டுத்தனமா இருக்காரு யாருக்கும் கோபம் வராதா? அவர் என்ன பெரிய ரவுடியா என சொல்ல வர முத்துவை பார்த்ததும் அவர் பேச்சை அடக்கிக் கொள்கிறார்.
உடனே முத்து ஏன் அத்தை நிறுத்திட்டீங்க பேசுங்க, வெளியில ஆல் வச்சு காத்துகிட்டு இருக்க சொன்னீங்க போல என்று முத்து கோபப்படுகிறார். கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்தரீங்களா என்று கேட்க சத்தியா உங்களை யார் கூப்பிட்டது நீங்க எந்த முகத்தை வைத்துக்கொண்டு இங்கே வந்தீங்க என்று கேட்க முத்து சத்யாவை போட்டு அடித்து இங்க வந்தேன் பாரு என்னுடைய புத்தியை செருப்பால அடிக்கணும் என்று கோபப்பட்டு முத்து கிளம்பி செல்கிறார்.
அதைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த மீனா நடந்த விஷயங்களை அண்ணாமலையிடம் சொல்ல விஜயா குரங்குக்கு டிரஸ் போட்டு விட்டாலும் அது பண்ற வேலைய தான் பண்ணும். அப்படித்தான் இந்த முத்துவும் என்று பேசிக் கொண்டிருக்க யாராவது குரங்குக்கு ட்ரெஸ் போட்டு ஸ்கூலுக்கு அனுப்புவாங்களா? லூசு மாதிரி எதையும் பேச வேண்டாம்னு சொல்லுங்கப்பா என்று வீட்டுக்கு வந்து முத்து சொல்ல அண்ணாமலை முத்துவை திட்டி இனிமே என் முகத்தில் முழிக்காத என கிளம்பி செல்கிறார்.
இதனால் முத்து நீ எதுக்கு அப்பா கிட்ட சொன்ன எதுவா இருந்தாலும் என்கிட்ட நேரடியா சொல்ல வேண்டியது தானே என்று மீனாவிடம் கோபப்பட நான் என் மாமா கிட்ட சொன்னேன் உங்களுக்கு என்ன என்று பதிலடி கொடுக்க முத்து அங்கிருந்து வெளியேற மீனா பாத்திரங்களை தள்ளிவிட்டு கோபத்தை காட்ட விஜயா இப்படியே போனா இவளே வீட்டை விட்டு வெளியே போய்டுவா போல அதுவும் நல்லது தான் என்று சந்தோஷப்படுகிறார்.
அதைத்தொடர்ந்து சுருதி அம்மா கொடுத்த ஆலப்புழா டிக்கெட்டை கொடுத்து ரவியை கேரளா கூப்பிட ரவி வேலை இருக்கு என்று சொல்ல ஓசி டிக்கெட் தானே உன்னை என்ன செலவா பண்ண சொல்றேன் என்று சொல்ல எனக்கு ஓசி டிக்கெட் ஒன்று தேவை இல்லை வேணும்னா நீ போயிட்டு வா என்று கோபப்பட்டு வெளியே வருகிறார்.
மொட்டை மாடியில் முத்து இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்க மனோஜ் கையில் பாயுடன் மேலே வர முத்து இருப்பதை பார்த்து என்னடா இங்க இருக்க ஹால்ல படுத்து தூங்க வேண்டியது தானே என்று கேட்கிறார். ஹால்ல அனல் அடிக்குது என்று முத்து சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து மனோஜ் நீ அந்த பக்கம் இருந்துக்க நான் இந்த பக்கம் இருந்துக்கிறேன் என்று சொல்ல உனக்கு எங்க பாத்தாலும் பங்கு பிரிக்கிறது வேலையா போச்சு என்று முத்து திட்டுகிறார். அதன் பிறகு ரவி மேலே வர முத்து இன்னொரு கோடை சேர்த்து போடு என்று சொல்ல மனோஜ் ரவியை பார்த்து நீ என்னடா மேல வந்துட்ட என்று கேட்க முத்து உனக்கும் அனல் அடிக்குதா என்று சொல்ல ஆமாம் என்று கூறுகிறார்.
இவர்கள் எல்லோரும் திருமண வாழ்க்கை பற்றி பேசி கவலை படுகின்றனர். ரவி மனோஜ் காதலிக்கும் போது இருந்த பொண்ணுங்க கல்யாணத்துக்கு அப்புறம் அப்படியே மாறிடுறாங்க என்று சொல்ல உங்களுக்குனாலும் கல்யாணத்துக்கு முன்னாடி பின்னாடினு கதை இருக்கு எனக்கு அப்படி இல்லையே என்று சொல்கிறார்.
சின்ன வயசில் ஒன்றாக மாடியில் தூங்கிய விஷயங்களை பற்றி பேசி கொள்கின்றனர். அப்படியே மறுபக்கம் மீனா தூக்கம் வராமல் டீ போட்டு குடிக்க ஸ்ருதியும் வந்து டீ கேட்க ரவி எங்கே என்று கேட்க அவன் மொட்டை மாடி போயிட்டான் என்று சொல்ல மீனா பிரச்சனை என்று கேட்டதும் ஆமாம் என கூறுகிறார். கொஞ்ச நேரத்தில் ரோகினியும் வந்து டீ கேட்கிறார். ஸ்ருதி உங்களுக்கும் பிரச்சனையா என்று கேட்க ரோகிணி ஆமாம் என்று சொல்கிறார். புருஷனு வந்துட்டாலே பிரச்சனைதான் போல என்று பேசுகின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.