ரோகினிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் அம்மா.
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினிக்கு ஃபோன் செய்து நாளைக்கு வீட்ல ஒரு பங்க்ஷன் இருக்கு என தாலி பிரித்துப் போடும் நிகழ்ச்சி குறித்து சொல்கிறார். மேலும் மனோஜோட பாட்டி உன்னை பாக்கணும்னு சொன்னாங்க நாளைக்கு வீட்டுக்கு வந்துரு என்று சொல்ல ரோகிணியும் வருவதாக சொல்கிறார்.
அடுத்து வீட்டின் காலிங் பெல் அடிக்க மனோஜ் தான் வந்திருப்பார் என நினைத்து கதவைத் திறக்க அம்மாவும் கிருஷ் வந்து நிற்பதை பார்த்து ரோகினி அதிர்ச்சி அடைகிறார். அதன் பிறகு ரோகினி நீங்க எதுக்கு வந்த எனக்கு கோபப்பட உன்னுடைய கல்யாணத்துக்கு என்னால முடிஞ்சதை செய்ய வந்ததாக சொல்லி 50000 பணத்தை எடுத்துக் கொடுத்து கிளம்புகிறேன் என்று சொல்ல லேட்நைட் ஆயிடுச்சு நாளைக்கு காலையில போ என நிறுத்தி விடுகிறார்.
மறுநாள் காலையில் முத்து வேக வேகமாக வேலைக்கு கிளம்ப மீனா எல்லோரும் முத்துவை பத்து மணிக்குள் வந்து விடுமாறு சொல்லி அனுப்புகின்றனர். மேலும் அண்ணாமலை மீனாவுக்காக வாங்கிய நகைகளை எடுத்து வந்து பாட்டியிடம் காட்ட அதை பார்த்து விஜயா வயிறு எரிகிறார். மேலும் மீனா கிச்சனில் இருக்கும் போது மஞ்ச தாலி கட்டினதுக்கு இந்த நிலைமைக்கு வந்துட்டான் இன்னும் தங்கத்துல தாலி போட்டா என்னெல்லாம் அவஸ்தைப்பட போறானோ என பேசி மீனாவை கலங்க வைக்கிறார்.
இங்கே ரோகினி தன்னுடைய அம்மாவையும் மகனையும் ஆட்டோவில் ஏற்றி அனுப்ப ஏற்பாடு செய்ய அப்போது க்ரிஷ் அத்தை என் ஸ்கூல்ல எல்லாரும் எனக்கு அம்மா இல்லன்னு கிண்டல் பண்றாங்க நீ ஒரு நாள் வந்து அவங்கள திட்டு என சொல்ல ரோகிணி குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். பிறகு இதுவரையில் ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டு விஜயா வீட்டுக்கு கிளம்பி வருகிறார்.
அதன் பிறகு கோவிலுக்கு வந்த மீனா விஜயா சொன்ன வார்த்தைகளால் கடவுளிடம் கண்கலங்கி வேண்டுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் ஆட்டோ ரிப்பேர் ஆகி ரோகினியின் அம்மா வழியில் நடந்து வர மீனா இதை பார்த்து அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.