எலியும் பூனையுமாக இருக்கும் விஜயாவை வைத்து முத்து போட்ட பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களை பின்னுக்கு தள்ளி தற்போது நம்பர் ஒன் இடத்தை பிடித்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் முத்துவும் அவரின் அம்மா விஜயாவும் எப்போதும் எலியும் பூனையுமாக இருந்து வருகின்றனர். அம்மாவாக இருந்தாலும் தப்பு தப்பு தான் என முத்து அவரை நேரத்துக்கு ஏற்றார் போல நக்கல் அடித்து வருகிறார்.

சீரியலில் இப்படி இருந்து வரும் நிலையில் தற்போது முத்து விஜயா உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு ஒரு முறை என்ன பாரம்மா என்ற பாடலுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று லைக்குகளை குவித்து வருகிறது. இருவரும் நடிப்பில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என பாராட்டி தள்ளி வருகின்றனர்.