விஜயாவுக்கு மனோஜ் அதிர்ச்சி கொடுக்க முத்து கலாய்த்து விட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்தியிடம் கார் சாவியை ஒப்படைக்க மீனா கார் ஓட்டும் போது எந்த கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது கண்டிஷன் போடுகிறார்.
பிறகு கார்த்தி நீ இந்த மாதிரி இன்னும் பெருசா வளரனும் முத்து என்னை மாதிரி நிறைய பேர் உன்கிட்ட வேலை செய்யணும் நீ பெரிய தொழிலதிபராகணும் என்று வாழ்த்தி பேச மனோஜ் இவன் தொழிலதிபரா என்று கிண்டல் அடிக்க முத்து ஆமா இவன்தான் பெரிய தொழிலதிபர் நாலு லட்சத்தை ஏமாந்துட்டு வந்திருக்கான் என்று கலாய்க்கிறார்.
அதன் பிறகு விஜயா மனோஜ்க்கு சப்போர்ட் செய்து பேசி பல்பு வாங்குகிறார். பிறகு மனோஜ் இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுறேன் நான் போய் ஒருத்தரை பாத்துட்டு வரேன் என்று கிளம்பி வருகிறார்.
மனோஜ் சந்தோஷ் உடன் ஜோசியர் ஒருவரை பார்த்து தனக்கு வந்த லெட்டரை கொடுத்து இந்த மாதிரி எனக்கு பிரச்சனை வருமா என்று கேட்க மனோஜ் முகத்தை பார்த்த ஜோசியர் உன்ன பாத்தா பிராடு மாதிரி தான் தெரியுது. கண்டிப்பா பிரச்சனை வரும் என ஷாக் கொடுக்கிறார். உனக்கு பிரச்சனை வரக்கூடாதுனா நான் சொல்ற மாதிரி டிரஸ் போடணும் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலர் டிரஸ் போட வேண்டும் என்று லிஸ்ட் போடுகிறார்.
மனோஜ் என்ன சாமி பரிகாரம் ஏதாவது சொல்லுவீங்கன்னு பாத்தா டிரஸ் மாத்த சொல்றீங்க என்று கேள்வி கேட்க நான் சொல்ற மாதிரி செய்யலைன்னா நீ நடுத்தெருவுக்கு வந்து பிச்சை தான் எடுக்கணும் என்று பயம் காட்டுகிறார். அதோடு மனோஜ் சட்டையை கழட்ட சொல்லி ஒரு மஞ்ச கலர் டவலை கொடுத்து போத்திக் கொள்ள சொல்கிறார்.
அடுத்ததாக முத்து மீனா உண்டியலில் காசு சேர்ப்பதற்காக புது உண்டியலை வாங்கிட்டு வர இதை பார்த்த விஜயா ரோட் ரோடா போய் பிச்சை எடுத்து அதுல வர காசு வச்சுத்தான் ரூம் கட்ட போறீங்களா? என்று நக்கலாக பேச மீனா இதுல காசு சேர்த்து வச்சு ரூம் கட்ட போறோம் என்று சொல்கிறார். ஒரு பா, ரெண்டு ரூபா, மூன்று ரூபா போட்டு ரூம் கட்ட போறீங்களா என்று கிண்டலாக பேசிக்கொண்டிருக்க மனோஜ் அம்மா என பிச்சைக்காரன் போல கூப்பிட விஜயா திரும்பி பார்க்க முத்து அம்மா சொன்னா மாதிரி பிச்சைக்காரன் வந்துட்டான் என்று கலாய்க்கிறார்.
விஜயா என்னடா இது கோலம் என்று போர்வையை இழுக்க மனோஜ் இது எனக்கு கவசம் என்று சொல்வதோடு என்னுடைய தனிப்பட்ட விஷயத்துல தலையிடாதீங்க எனவும் ஷாக் கொடுக்கிறார். முத்து இதையே வைத்து விஜயாவை கலாய்க்கிறார்.
பிறகு ரோகிணி உண்டியலை பார்த்து கிண்டல் அடிக்க முத்து இதை மனோஜ் ரூம்ல வைக்கலாம் திருடன் கையில சாவி கொடுத்தா தான் திருடு போகாமல் இருக்கும் என்று ரோகினியை கலாய்த்து வெறுப்பேற்ற ரோகினி கோபப்பட மீனா உள்ள போய் நீங்களே பாருங்க அவர் ஏன் அப்படி பேசினாருனு உங்களுக்கு புரியும் என்று பதிலடி கொடுக்கிறார்.
பிறகு ரோகிணி ரூமுக்குள் வர மனோஜ் கெட்டப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்து என்ன இது என்று கேட்க இனிமேல் இப்படித்தான் என ஜோசியரை பார்த்த விஷயத்தை சொல்ல ரோகினி உன்னுடைய பயம் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று திட்ட மனோஜ் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். மேலும் ஒரு வாரத்திற்கு கடைக்கு வரமாட்டேன் நீயே கடையை பார்த்துக்கொள் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.