
ரவிக்கு பொண் பார்க்க விஜயா முடிவெடுக்க அண்ணாமலை அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா எல்லாரையும் கூட்டி வைத்து ரவிக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு எடுத்து இருக்கேன் என்று சொல்ல அண்ணாமலை என்ன திடீர் அக்கரை என்று கேட்கிறார்.

எனக்கு அவன் மேல அக்கறை இல்லன்னு யார் சொன்னது நான் முத்து முத்தாக மூன்று பிள்ளைகளை பெற்று வச்சிருக்கேன் என்று சொல்ல முத்து அப்பா எனக்கு அப்படியே புல்லரிக்குது ஆனா முத்து நீர் நான் ஒரே ஒருவன் மட்டும் தான் இருக்கேன் என்று கூற விஜயா நாக்கு ஸ்லிப் ஆகிவிட்டது என்று சமாளிக்கிறார்.
அடுத்ததாக அண்ணாமலை பரசுவின் பெண்ணை ரவிக்கு கட்டி வைக்க போவதாக சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார். வசதி இல்ல அந்த பொண்ணு எப்படி இருக்குமோ என்று சொல்ல அழகு என்பது மனசுல தான் இருக்கு என அண்ணாமலை பதிலடி கொடுக்க முத்து ரொம்ப நல்ல விஷயம் சரசு மாமாவும் ரொம்ப நல்லது இந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு நீங்க எடுத்து இருக்க முடிவு சூப்பர் என பாராட்டுகிறார்.

பிறகு அண்ணாமலை நீ பரசுவிடம் சென்று பேசிட்டு வா அதுக்கப்புறம் குடும்பத்தோட பொன் பார்க்க போகலாம் என்று சொல்ல முத்து கிளம்பி செல்கிறார். அடுத்ததாக மனோஜ் பார்க்கில் உட்கார்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
இங்கே மீனா ரவியிடம் சீக்கிரம் ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சுடுங்க நீங்களும் குடும்பத்தனாக போறீங்க என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார். உங்களுக்கு பொண்ணு பார்த்தாச்சு பரசு மாமாவோட பொண்ணு தான் உங்க அண்ணன் அதைப்பற்றி தான் பேச போய் இருக்காரு என்று சொல்ல ரவி அதிர்ச்சி அடைகிறார். எனக்கு எதுக்கு பா இப்ப கல்யாணம் என்று கேட்க உனக்கு கல்யாண வயசு ஆகிடுச்சு என்று சொல்ல விஜயா உனக்கு எந்த மாதிரி இடத்துல பொண்ணு பார்த்து இருக்காரு பாரு என பேசுகிறார்.

அடுத்ததாக முத்து வீட்டுக்கு வர அண்ணாமலை என்ன ஆச்சு பரசு என்ன சொன்னா என்று கேட்க இப்போ நீங்கதான் முத்து நான் பரசு மாமா அவர் என்ன சொன்னாரு அது அப்படியே சொல்றேன் என உட்காருகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.