மனோஜ் பணத்தை திருப்பிக் கொடுக்க முத்துவுக்கு சந்தேகம் வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து எல்லோருக்கும் அந்தமானுக்கு டிக்கெட் போட சொல்ல விஜயா அது என்ன பொருட்காட்சியா எல்லாருக்கும் டிக்கெட் போட என்று சொல்ல முத்து அப்படின்னா டிக்கெட்டை கேன்சல் பண்ணிட்டு பணத்தை கொடுக்க சொல்லுங்க அது என் அப்பாவோட பணம் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

அவன் பொண்டாட்டிய அனிமூன் கூட்டிட்டு போனா அவன் பணத்துல கூட்டிட்டு போகணும் என்று சொல்ல ரோகிணி இப்ப என்ன உங்களுக்கு பணம் தான் வேணும் இன்னும் ரெண்டு நாள்ல மனோஜ்க்கு செலரி கிரெடிட் ஆயிடும் எனக்கும் இந்த மாசம் பேமென்ட் முழுசா வந்துடும், உங்க பணத்தை கொடுத்து விடுறோம் போதுமா என்று சொல்ல விஜயாவும் மனோஜூம் அதிர்ச்சி அடைகிறார்கள்.

உடனே விஜயா இப்போதைக்கு டிக்கெட் கேன்சல் பண்ணி அவன் பணத்தை கொடுத்துடுங்க இன்னும் கொஞ்சம் காசு சேர்த்து அதுக்கு அப்புறம் நீங்க வெனிஸ் போயிட்டு வாங்க என்று கூறுகிறார். ரோகினியும் ஆன்ட்டி சொல்றதுதான் சரி நீங்க டிக்கெட் கேன்சல் பண்ணி அந்த பணத்தை கொடுத்திடுங்க என்று சொல்லி ரூமுக்குள் சென்று விடுகிறார்.

பிறகு மனோஜ் மொட்டை மாடியில் சிந்தனையில் இருக்க அங்கு வந்த விஜய்யா பணத்தை கொண்டு வந்து குடு வட்டி கட்டணம் ஒரு லட்சத்துக்கு எவ்வளவு பெரிய பிரளயமே ஏற்பட்டுடுச்சு 17 லட்சம் கடன் வாங்கி இருக்கது தெரிஞ்சா அவ்வளவுதான் நம்மள வீட்டை விட்டு துரத்திடுவாங்க என கோபப்படுகிறார்.

முதல்ல ஏதாவது ஒரு வேலையை தேடிக்க கம்மியான சம்பளமா இருந்தா கூட பரவால்ல இந்த வேலை கிடைச்சதனால அந்த வேலையை விட்டுட்டேனே ரோகிணி கிட்ட சொல்லி சமாளிச்சுக்கலாம் என்று அறிவுரை சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறார்.

அடுத்ததாக ஸ்ருதி ரவியின் ரெஸ்டாரண்டுக்கு வர இங்கே ஒரு லவ் ஜோடி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்க அதை பார்த்து இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கை பற்றி பேசுகின்றனர்.

அடுத்து வீட்டுக்கு வந்த மனோஜ் எல்லோரையும் வெளிய வர சொல்லி நான் எடுத்துட்டு பண பணத்தை கொடுக்க போறதாக சொல்ல முத்து சூப்பர் ரா எப்படி உனக்கு அதுக்குள்ள அவ்வளவு பணம் கிடைச்சது? அப்பாகிட்ட இருந்து எடுத்த 28 லட்சத்தையும் கொடுக்க போறியா என்று சொல்ல நான் எப்போ அதை கொடுக்கிறேன் என்று சொன்னேன்? அம்மாகிட்ட இருந்து எடுத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.

அடுத்து முத்து அம்மா அதை கொடுத்தது தானே சொன்னார்கள் நீ எடுத்ததா சொல்ற எங்கேயோ இடிக்குதே என்று கேட்டு ஷாக் கொடுக்கிறார். மனோஜ் பணத்தை கொடுக்க அதை முத்துவும் ரவியும் எண்ணிப் பார்க்க ரோகினி அவரை சந்தேகப்படுற மாதிரி இவங்க செய்றாங்க என்று கோபப்படுகிறார். அதான் உங்க பணத்தை கொடுத்துட்டாருல அப்புறம் என்ன என கேட்க அது எப்படி சரி ஆயிடும் என் தம்பி மேல வீணா பழியை போட்டு என் மொத்த குடும்பத்தையும் கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்தினாங்க அப்போ இவரு பணத்தை வாங்கின விஷயத்தை சொல்லாம அமைதியாக தான் இருந்தாரு என்று கேட்டு ரோகிணிக்கு பதிலடி கொடுக்கிறார் மீனா.

கடைசியில் நான்காயிரம் ரூபாய் குறைய ரவி ஏன்டா இப்படி பண்ற என்று கேள்வி கேட்க என்ன முதல்ல பேச விடுங்கடா கேன்சலேசன் சார்ஜ்ன்னு சொல்லி நான்காயிரம் ரூபாய் புடிச்சிட்டு தான் குடுத்தாங்க என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.