அம்மா எதிரே வந்து நிற்க அதிர்ச்சி அடைந்துள்ளார் ரோகினி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மீனாவின் குடும்பத்தார் வீட்டுக்கு வந்த நிலையில் அண்ணாமலை ரோகினியை கூப்பிட்டு இதுதான் மனோஜ்க்கு பார்த்திருக்க பொண்ணு என்று அறிமுகம் செய்து வைக்க மீனாவின் அம்மா என்னம்மா பங்க்ஷனுக்கு வந்து வெறும் தலையா இருக்க என்று பூ எடுத்து வைத்து விடுகிறார்.

அதன் பிறகு ரோகிணி டைனிங் டேபிளில் உட்கார்ந்து இருக்க அங்கு வரும் மீனாவின் அம்மா ரோகிணியை பார்த்து அப்பா அம்மா குறித்து விசாரிக்க ரோகிணி எதையோ பதில் சொல்லி சமாளிக்கிறார். பிறகு பாட்டி ரோகினியை கூப்பிட்டு மீனாவுக்கு மேக்கப் போட்டு விட சொல்ல விஜயா அவ எதுக்கு போடணும் என்று தடுக்க முயற்சி செய்ய ரோகிணி நான் போட்டிருந்தேன் என மீனாவை கூட்டிப் செல்கிறார்.

மீனா தன்னுடைய ரூமின் கதவை திறந்து உள்ளே போக க்ரிஷ் மற்றும் ரோகினி அம்மா என இருவரும் தூங்கிக் கொண்டிருக்க பாட்டி மனோஜ் ரூமில் ரெடியாக சொல்லி அனுப்பி வைக்கிறார். இதனால் இந்த முறை இருவரும் பார்க்காமல் மிஸ் ஆகி விடுகின்றனர்.

அடுத்ததாக முத்து வீட்டுக்கு வர ரோகிணியை பார்த்து பிராடு நீ என்ன இங்கே என கேட்க ரோகினி அதிர்ந்து போய் நிற்கிறார். பிறகு முத்து ஹாஸ்பிடலில் நடந்த விஷயங்களை சொல்ல அண்ணாமலை இந்த பொண்ணுதான் உன்னை மனோஜ்க்கு பார்த்திருக்க பொண்ணு உனக்கு அண்ணி என்று சொல்கிறார். அவனே ஒரு பிராடு அவனுக்கு ஏற்ற பிராடு தான் என்று முத்து சொல்கிறார். அதன் பிறகு விஜயா அவன் பேசுனதை எல்லாம் பெருசா எடுத்துக்காத என ரோகிணியை சமாதானம் செய்கிறார்.

அதன் பிறகு நலங்கு வைக்கும் பங்க்ஷன் தொடங்க மீனாவுக்கு விஜயாவை நலங்கு வைத்துவிட சொல்லி பாட்டி சொல்ல அவரும் மறுப்பு சொல்ல முடியாமல் நலங்கு வைத்து விடுகிறார். அதன் பிறகு ரோகிணியின் அம்மா வெளியே வர இருவரும் சந்தித்துக் கொண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.

ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவர் நலங்கு வைத்துவிட்டு ரூமுக்கு செல்ல ரோகிணி பின்னாடியே சென்று நீ எதுக்கு இங்க வந்த என சத்தம் போடுகிறார். தனியாக கூட்டிச்சென்று கோபப்பட அவர் நல்ல குடும்பமா தான் இருக்கு உண்மையை சொல்லிடலாம் என்று சொல்ல அதுக்கு நீ என்ன கொன்னுட்டு போயிடு என ரோகிணி ஆவேசப்படுகிறார்.

அதோடு இல்லாமல் எனக்கு நல்லது பண்ணனும்னு நெனச்சனா இப்பவே இங்க இருந்து போயிடு என சொல்வதோடு இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் க்ரிஷ் தூக்கத்திலிருந்து எழுந்து வெளிய வர ரோகிணியை பார்த்து அத்தை என கூப்பிடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.