மீனா விபத்தில் சிக்க முத்து பதறி போய் உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் டப்பிங் முடித்துவிட்டு சுருதி ரவிக்கு போன் செய்து இன்னிக்கி என்ன ஸ்பெஷல் என கேட்க இன்னைக்கு ஸ்பெஷல் எதுவும் இல்லை என்று சொல்ல ஸ்பெஷலா ஏதாவது பண்ணி இருப்பீங்கன்னு தான் போன் பண்ணேன், இப்படி சொல்றீங்களே என ஸ்ருதி வருத்தப்படுகிறார்.
ரவி சரி உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க செஞ்சு கொடுத்து அனுப்புகிறேன் என்று ஸ்ருதிக்கு பிடித்த விஷயங்களை கேட்க பிறகு சுருதி ரவிக்கு பிடித்த விஷயங்களை கேட்டு அறிந்து கொள்கிறார். ரவி ஸ்ருதிக்காக சாண்ட்விச் செய்து கொடுக்க சுருதி சீக்கிரமாக ஹோட்டலுக்கு வந்து சந்திக்கிறேன் என சொல்லி போனை வைக்கிறார்.
அதன் பிறகு மீனாவும் முத்துவும் கோவிலுக்கு சென்று கொண்டிருக்க அப்போது முத்து இங்க பக்கத்துல தான் என்னோட ஃப்ரெண்ட் வீடு அங்க போயிட்டு போகலாம் என்று சொல்ல மீனா உங்க பிரண்டு வீட்டுக்கு போனா நீங்க என்ன நிக்க வச்சுட்டு கதை பேசிக்கொண்டே இருப்பீங்க, என்னை கிரிஷ் வீட்டில் விடுங்க எனக்கு அவனை பாக்கணும் போல இருக்கு என்று சொல்ல முத்து க்ரிஷ் வீட்டில் இறக்கிவிட்டு நண்பனை பார்க்க சென்று விடுகிறார்.
க்ரிஷ் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்க எல்லோரும் வீட்டுக்கு கிளம்பி விட பிறகு அவன் மீனாவை விளையாட கூப்பிட மீனாவும் விளையாடிக் கொண்டிருக்கும் போது கார் ஒன்று வேகமாக வர மீனா கிரிஷ்ஷை காப்பாற்ற ஓடிப் போய் விபத்தில் சிக்குகிறார்.
காரில் வந்தவர்கள் நிற்காமல் சிரித்துக் கொண்டே செல்ல இதை பார்த்த முத்து கடுப்பாகி ஓடிப்போய் காரை நிறுத்தி காரில் இருந்தவர்கள் அடித்து கூட்டி வந்து மீனாவிடம் மன்னிப்பு கேட்க வைக்கிறார். பிறகு பாட்டி செய்வது போல எதையோ ஒரு தழையை பறித்து வந்து மீனாவின் காலில் பிழிந்து விட்டு மசாஜ் செய்து விடுகிறார். ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார்.
மறுபக்கம் சீதா கடைகளுக்கு பூ கொடுத்து விட்டு வரும்போது வழியில் ரவியை சந்திக்க இருவரும் பேசிக்கொண்டே வீட்டிற்கு வருகின்றனர். பிறகு சீதாவின் அம்மாவும் இவர்களை பார்த்து விட்டு ரவியை வீட்டுக்கு கூப்பிட ரவி இன்னொரு நாள் வரேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார்.
பிறகு மீனாவின் அம்மா சீதாவிடம் ரவியிடம் கொஞ்சம் அளவாக பேசு, அவங்க அம்மா கண்டபடி பேசுவாங்க, அப்புறம் அது மீனாவுக்கு தான் பிரச்சனை என்று வார்னிங் கொடுக்கிறார்.
இதைத் தொடர்ந்து மீனாவும் முத்துவும் வீட்டுக்கு வர மீனாவை டாக்டர் நடக்கக்கூடாது என்று சொன்னதால் அவர் நடக்க கஷ்டப்பட முத்து மீனாவை தூக்கிக்கொண்டு செல்கிறார். இதைப் பார்த்த அன்னம் அக்காவும் பாட்டியும் சந்தோஷப்படுகின்றனர்.
பாட்டி பச்சையம்மனிடம் பேச இதைப் பார்த்த முத்து என்ன பாட்டி திரும்பவும் தாத்தா கிட்ட பேசிகிட்டு இருக்கீங்களா என்று கேள்வி கேட்க இல்ல பச்சையம்மனுக்கு நன்றி சொல்லிக்கிட்டு இருக்கேன், ரெண்டு நாள்ல உங்களை சேர்த்து வச்சுட்டா என்று சொல்ல முத்து திருதிருவென முழிக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.