
மீனா பைனான்ஸ் வீட்டுக்கு போக முத்துவை அவமானப்படுத்த பிளான் போடுகிறார் ரோகிணி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரவி அம்மா விஜயா தன்னை பார்த்து பேசிய விஷயத்தையும் வீட்டுக்கு அழைத்த விஷயத்தையும் சொல்ல சுருதி சரி போயிட்டு வா என்று சொல்கிறார். உன்னை நான் வர சொன்னாங்க என் மருமகள் கூட்டிட்டு வா இங்கேயே இருன்னு சொன்னாங்க அம்மா அந்த வீட்டிலேயே நாம ரெண்டு பேரும் இருக்கணும்னு ஆசைப்படறாங்க என கூறுகிறார்.

உடனே ஸ்ருதி என்னை நான் கூப்பிட்டாங்க நான் உன்னை மட்டும் கூப்பிட்டு இருப்பாங்க உனக்கும் இந்த மேரேஜ் லைப் போர் அடிச்சிட்டு இருக்கும்னு நினைச்சேன் அதனால என்ன கழட்டி விட்டு போயிடுவேன்னு நினைச்சேன் என்று சொல்ல ரவி என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? என்ன அவ்வளவு சீப்பா நினைச்சுட்டல உயிரே போனாலும் நான் பாதியில விட்டு போக மாட்டேன் என சொல்ல ஸ்ருதி ரவியை கட்டிப்பிடித்துக் கொண்டு சாரி கேட்டு லவ் யூ சொல்கிறார்.
அதன் பிறகு மீனா காலையில் எழுந்து வேக வேகமாக எல்லாவற்றையும் சமைத்து முடித்து விட விஜயா இல்லை என்ன பாம்பு போட்டு குழம்பு வெச்சி இருக்கியா என்று இது பூண்டு குழம்பு பூண்டு மட்டும் தான் போட்டு இருக்கு இது பொறியல் பெரும் காய் மட்டும்தான் இருக்கு நான் எதையும் புடிச்சு போட்டு செய்யல என அனைவரையும் கூப்பிட்டு வச்சேன் எல்லோருக்கும் சேர்த்து வைத்து பதிலடி கொடுக்கிறார்.

பிறகு அண்ணாமலை இடம் மாமா நான் கொஞ்சம் வெளியில போயிட்டு வரேன் என்று சொல்ல விஜயா தினமும் எங்க ஊர் சுத்த போற என அவமானப்படுத்த கோயிலுக்கு தான் போறேன் என சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறார்.
அடுத்து ரோகினி பைனான்சியர் வீட்டுக்கு மசாஜ் செய்ய வர மறுபக்கம் மீனா ஆட்டோவில் எல்லா கோவில்களிலும் இறங்கி சாமி கும்பிட்டு விட்டு ஃபைனான்சியர் வீட்டிற்கு வருகிறார். பைனான்சியரை பார்த்து பேச வந்த மீனா அங்கு ரோகிணி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
பைனான்சியர் ஏன்மா நான் நேற்றே சொல்லிட்டேன்ல முத்துவுக்கு காரு கொடுக்க முடியாது என்று அவன் வேலை இல்லாம கஷ்டப்பட்டால் தான் தெரியும் என சொல்ல மீனா கையெடுத்து கும்பிட்டு எனக்காக ஒருமுறை அவரை மன்னிச்சுடுங்க அவர் வேலை இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுறாரு போல இடமெல்லாம் அவரை அவமானப்படுத்துறாங்க என கண்கலங்கி கேட்க பைனான்சியர் உன்ன பார்த்தாலும் பாவமா தான் இருக்கு அவனை ஆபீஸ்க்கு வந்து எல்லாரும் முன்னாடி என்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லு மன்னிக்க நான் தயாராக இருக்கிறேன் என சொல்லி அனுப்புகிறார்.

இதையெல்லாம் பார்த்த ரோகினி ஓ முத்துவுக்கு வேலை இல்லையா இது போதுமே என அவரை அவமானப்படுத்த பிளான் போடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.