மனோஜ் விஜயா மீது ரோகினிக்கு சந்தேகம் வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மீனா வெட்கப்பட்டு கொண்டே வெளியே வர அதை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைகிறார். ரோகினிக்கு முன்னாடி இவ புள்ள பெத்துடு வா போல என புலம்பி தவிக்க மறுபக்கம் சீதா சைக்கிள் பஞ்சர் என்பதால் தள்ளிக் கொண்டு வீடுகளுக்கு பூ கொடுக்க வருகிறார்.

எதிரே வந்த ரவி என்ன நடந்து வர என்று கேட்டு சரி வா நான் கூட்டிட்டு போறேன் என சீதாவை அழைத்துச் செல்ல பார்வதி அதை பார்த்து விடுகிறார். என்ன பெரிய மன்மதனா இருப்பான் போலயே என நினைத்து விஜயாவுக்கு போன் செய்து அந்த சீதா உன் வீட்டு மருமகளா வந்து வா போல என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

இப்படியே விட்டால் சரி வராது நீ அவனுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணி வை என்று சொல்ல விஜயா நீயே ஒரு பணக்கார பொண்ணா இருந்தா சொல்லு என கூறுகிறார். அடுத்து ரோகிணி ரூமில் ஏதோ யோசனையில் இருக்க மனோஜ் என்ன விஷயம் என்று கேட்க ஒரு லட்சம் ரூபாய் பணம் உன் கைக்கு எப்படி வந்தது ஆன்ட்டி எப்படி அத மறந்தாங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்க மனோஜ் பதில் சொல்ல முடியாமல் எதையோ சொல்லி சமாளிக்க முயற்சி செய்கிறார்.

இதையெல்லாம் கேட்ட விஜயாவும் ரூமுக்குள் ஓடி வந்து நான் எப்படி மறந்தேன் எனக்கே தெரியலமா என்று புது ட்ராமா போட்டு ஒரு வழியாக ரோகிணியை சமாளிக்கிறார்.

அடுத்து ரூமில் இருந்து வெளியே வந்த முத்து திரும்பவும் இப்படி தப்பு நடந்து போச்சு உனக்கு ஏன்டா இந்த சபல புத்தி என தன்னைத்தானே திட்டிக் கொண்டு எல்லோரையும் கூப்பிட்டு இனி இந்த வீட்ல சண்டையே நடக்கக்கூடாது அதனால எனக்கு தான் பிரச்சனையாகுது பின் விளைவு வேற மாதிரி இருக்கும் என்று புலம்ப அண்ணாமலை என்னதான்டா சொல்ற என்று கேள்வி கேட்க ஒரு பிரச்சனை எனக்கு நாலா தெரியுது என சொல்ல மீனா வெக்கப்பட்டு நெளிகிறார்.

அடுத்து எல்லாம் உன்னால வந்தது உனக்கு இப்போ ஹனிமூன் அவசியமா என கேட்டு மனோஜை திட்டி அப்பா நீ கல்யாணம் ஆகி ஹனிமூன் போய் இருக்கியா என கேட்க அண்ணாமலை நான் எங்கடா அதெல்லாம் போயிருக்கேன் என்று சொல்ல மீனா நீயும் போனோமா உனக்கு ஆசை இருக்கா என்று கேட்க மீனா இருக்காதா பின்ன என்று கூறுகிறார். உடனே முத்து அப்போ எல்லோருக்கும் அந்தமானுக்கு ஹனிமூன் டிக்கெட் போடுடா என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.