மீனாவின் குடும்பத்துக்கு முத்து அதிர்ச்சி கொடுக்க அண்ணாமலை கண் கலங்கி உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வேக வேகமாக மீனாவின் வீட்டுக்கு வரும் முத்து செயினை மீனாவின் தங்கச்சியிடம் கொடுத்துவிட்டு இந்த செயின் எனக்கு வேண்டாம் உங்க பொண்ணு என்ன பேச்சு பேசுறா? தெருவுல நின்னுட்டு கத்தி எங்க அப்பாவை தலைகுனிய வச்சுட்டா என சத்தம் போட்டு விட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

அதன் பிறகு மீனாவின் அம்மா மீனாவுக்கு போன் போட்டு இப்போ உனக்கு சந்தோசமா என கொடுத்து செயினை கொண்டு வந்து கொடுத்த விஷயத்தை சொல்ல மீனா அதுல ஒரு தப்பு நடந்தது அவர் செயினை வச்சு குடிக்கல பரசு எங்களோட மனைவிக்கு உடம்பு சரியில்லன்னு கொடுத்திருக்காரு என சொல்ல மீனாவின் அம்மா அவளை திட்டி போனை வைக்கிறார்.

பிறகு மீனா அண்ணாமலையிடம் நடந்த விஷயத்தை சொல்லி மன்னிப்பு கேட்கிறார். கொஞ்ச நேரம் கழித்து முத்து வீட்டுக்கு வர மீனா செயின் என ஆரம்பிக்க அந்த செயினை எடுத்துட்டு போயிட்டு உங்க அம்மா கிட்ட கொடுத்துட்டேன் சந்தேகமா இருந்தா போன் போட்டு கேட்டுக்க என்று சொல்ல, மீனா சொல்லிட்டாங்க நீங்க செயினை வச்சு என்ன பண்ணீங்க என்று கேட்க அதை பத்தி உனக்கு எதுக்கு? செயின் தான் உனக்கு வந்துடுச்சுல நீ வாயை திறக்க கூடாது என சொல்ல பரசு அங்கிள் நீங்க பணம் கொடுத்த விஷயத்தை சொல்லிட்டாரு என சொல்ல சத்தமா பேசாத அப்பாவுக்கு தெரிந்தா கஷ்டப்படுவாரு.

அவரால பரசு மாமாவுக்கு பணம் கொடுக்க முடியலன்னு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் என்று எனக்கு தெரியும் அதனால தான் நான் பணம் கொடுத்தேன். இத நீங்க முன்னாடியே சொல்லி இருந்தா இவ்வளவு பெரிய சண்டையே நடந்து இருக்காது என்று சொல்ல பிரண்ட்ஸ் செயின் வெச்ச விஷயத்தை சொல்லாத என சொல்லி இருந்ததை முத்து கூறுகிறார்.

அதன் பிறகு முத்துக்கு சவாரி பற்றி ஒரு போன் கால் வர நான் உடனே கிளம்பி வரேன், இந்த பணம் தான் முக்கியம் பணம் இருந்தா தான் எல்லாரும் மதிப்பாங்க என கிளம்பி செல்கிறார். மறுநாள் காலையில் முத்து சவாரி முடித்துவிட்டு காரிலேயே தூங்க அங்கு வரும் அண்ணாமலை முத்துவிடம் உனக்கு அப்பா மேல அவ்வளவு பாசமா என நடந்த விஷயங்களை கேட்டு முத்துவை கட்டிப்பிடித்து கண் கலங்குகிறார்.

பிறகு நீ நல்லவன் தான் மீனாவும் நல்லவ தான். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா வாழனும் அதை நான் பார்த்துகிட்டே இருக்கணும் என்று அறிவுரை சொல்லி முத்துவை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.