சத்யாவை அசிங்கப்படுத்தி வெளியே துரத்திய விஜயா மனோஜ்க்கு பெரிய அதிர்ச்சி கொடுத்துள்ளார் முத்து.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா சத்யாவை மீனா வீட்டிற்கு அனுப்பி மன்னிப்பு கேட்டு வர சொல்ல சத்யாவும் கிளம்பி வருகிறான்.

மீனாவை தேடி வீட்டிற்குள் நுழைய அதை பார்த்த விஜயா டேய் திருட்டு பயலே நில்லடா இப்ப எதுக்கு வந்த என்ன திருட வந்த என்று கேள்வி கேட்டு அவமானப்படுத்த மீனா அவன் என்னதான் பார்க்க வந்தான் என்று சொல்ல விஜயா தேவையில்லாமல் பேசி சத்யாவையும் மீனா குடும்பத்தையும் அவமானப்படுத்துகிறார்.

அண்ணாமலையும் எதுவும் பேச முடியாமல் இருக்க மனோஜ் வெளியே வந்து இவன் எதுக்கு இங்க வந்தான் என்று கேட்க ஏதாவது திருடிட்டு போக வந்திருப்பான் அவன் பேக்ல ஏதாவது இருக்கான்னு பார்த்து அனுப்பு என்று சொன்னதும் பேக்கை கீழே கொட்டி அவன் சட்டை பேண்ட் பாக்கெட்டுகளில் பரிசோதனை செய்து கழுத்தை பிடித்து வெளியே தள்ள முத்து வந்து தாங்கி பிடிக்கிறார். முத்துவும் ரவியும் சத்யாவை வீட்டிற்குள் அழைத்து வந்து எதுக்கு அவனை இப்படி வெளியே துறத்துறீங்க என்று கேள்வி கேட்க பைக் திருடிய விஷயத்தை சொல்ல இதுதான் எனக்கு ஏற்கனவே தெரியுமே என்று சொல்லி முத்து அதிர்ச்சி கொடுக்கிறார்.

மேலும் அவன் திருட்டு பையனா அப்போ மனோஜ் யாரு இவன் அதைவிட பெரிய திருட்டு வேலை பண்ணிட்டு போனவன் என்று சொல்ல ரோகிணி அவர் திருடல ஏமாந்துட்டாரு என்று சொல்ல எங்க கிட்ட திருட்டு நான் பணத்தை தான் ஒரு பொண்ணு கிட்ட ஏமாந்துட்டான் முதல் குற்றவாளி இவன் தானே என்று கூறுகிறார்.

விஜயா ரோகினி போலீசுக்கு போன் பண்ணு என்று சொல்ல ரோகிணியும் போன் பண்ண போக முத்து பண்ணு நானும் ரவியும் மனோஜ் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கிறோம் என்று சொல்லி அதிர்ச்சி கொடுத்து இருவரையும் அடக்குகின்றனர்.

பிறகு மீனாவை சத்யாவை கூட்டிக்கொண்டு சாப்பிட வைக்க சொல்லி அனுப்பி வைக்க விஜயா கடுப்பாகிறார். அதைத்தொடர்ந்து ரவி ஸ்ருதியை டிராப் செய்துவிட்டு கிளம்பும்போது ரவுடிகள் அவனை சுற்றி வளைத்து பிரச்சனை செய்ய அந்த வழியாக வந்த முத்து இதைப் பார்த்துவிட்டு ரவுடிகளை அடித்து வெளுத்து யார் உங்களை செய்ய சொன்னது என்று கேட்கும் போது ஸ்ருதியின் அப்பா தான் என்பது தெரிய வருகிறது.

உடனே முத்து அவரை பார்க்க போக ரவி வேண்டாம் இது வேற பிரச்சினை என தடுக்க முயற்சி செய்து முடியாமல் போகிறது. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.