மனோஜ் அசிங்கப்பட்டு நிற்க மீனா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ்க்கு பெரிய பணக்கார இடத்தில் பெண் அமையப் போகிறது அவன் வாழ்க்கையில் செட்டிலாக போகிறான் என விஜயா சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருக்க அந்த சமயம் வீட்டுக்கு வரும் பெண் வீட்டுக்காரர் டிரைவர் மாப்பிள பாக்க அவங்க வர மாட்டாங்க அதை சொல்லிட்டு தான் வர சொன்னாங்க என சொல்லி ஷாக் கொடுக்கிறார்.

ஏன் என்ன விஷயம் என்று விசாரிக்க மனோஜ் ஏற்கனவே கல்யாணம் வரைக்கும் வந்து மணமேடையில் இருந்து ஓடிப்போன விஷயத்தை சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர். ஏற்கனவே ஒரு பொண்ணு விட்டுட்டு போனவன் திரும்பவும் ஓடி போக மாட்டான் என என்ன நிச்சயம் என திட்டி தீர்க்கிறார்கள். இதனால் உங்க மேல பயங்கர கோபத்துல இருக்காங்க பார்வதி அம்மா இனிமே நீங்க அவங்களுக்கு போன் பண்ண கூடாது வீட்டு பக்கமும் வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க என சொல்ல இதை கேட்ட முத்து சூப்பர்னா என சந்தோஷப்படுகிறார்.

நானும் உங்க இனம் தான் டிராவல்ஸ் வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன் நல்ல விஷயம் சொன்னீங்க என உள்ளே ஓடிச்சென்று செய்து வைத்திருந்த விதவிதமான பஜ்ஜிகளை எடுத்து வந்து கொடுக்கிறார். மனோஜ் அவமானப்பட்டு ரூமுக்குள் செல்ல விஜயா எங்கே போற மனோ எனக்கு இல்ல நான் தனியா இருக்கணும் என்று சொல்லி கதவை சாத்தி கொள்கிறார்.

மேலும் முத்து மீனாவை என் தலையில கட்டி வச்சுட்டாங்க என சொல்ல இதனால் மீனா ரூமில் கடுப்பாக இருக்க அப்போது ரூமுக்கு வரும் முத்து அந்த பச்சை சட்டை எங்கே என கேட்க மீனா எனக்கு என்ன தெரியும் நான் தலையில தூக்கி வெச்சிட்டு இருக்கேன் என கோபப்படுகிறார். இப்ப எதுக்கு கத்துக்கிட்டு இருக்க எனது முத்து கேட்க பார்ட்டிக்கு கூட்டிட்டு போயிட்டு இவர்கள் குடிக்கும் போது ஹவுஸ் ஓனர் வந்து மீனாவை பற்றி அசிங்கமாக பேசியதை சொல்லி வருத்தப்படுகிறார்.

பிறகு கோவிலில் விஜயா அந்த வீட்டுக்கு வரவே புடிக்கல என் பிள்ளைக்கு கல்யாணமே நடக்காதா என புலம்பிக் கொண்டிருக்க பார்வதி இந்த வரன் இல்லனா இன்னொரு வரன் இதைவிட பணக்கார குடும்பமா நான் பார்த்து வைக்கிறேன் என விஜயாவை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். பிறகு விஜயா வீட்டுக்கு வந்து மனோஜை பார்க்க பார்க்க லைட் கூட இல்லாமல் மனோஜ் இருட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

எவ்வளவு படித்து என்ன ப்ரயோஜனம் என்னுடைய மானம் மரியாதை எல்லாமே போயிடுச்சு எல்லாரும் இப்ப மண்டபத்தில் இருந்து ஓடிப்போனவன் தான் பேசுறாங்க புலம்ப நீ கவலைப்படாத உனக்கு நல்ல இடமா நான் பார்த்து வைக்கிறேன் என விஜயா ஆறுதல் கூறுகிறார். பிறகு மனோஜை வெளியே அழைத்து வர அண்ணாமலை பணத்தை தூக்கிட்டுப் போன பெண் மீது போலீசில் கம்பிளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்லி கூட்டிச் செல்கிறார். அதோட முதலில் ஒரு நல்ல வேலைக்கு போ அதுதான் உனக்கு மரியாதை என சொல்கிறார்.

பிறகு மீனா கடைக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அடகு கடைக்காரர் ஒருவர் பார்த்து முத்து தன்னிடம் வந்து 75 ஆயிரம் ரூபாய்க்கு நகை வைத்த விஷயத்தை சொல்ல மீனா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.