முத்துவுக்கு மீனா ஷாக் கொடுக்க மனோஜ் அவமானப்பட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து தூங்கிக் கொண்டிருக்க மீனா ரூமில் இருக்கும் துணிகளை துவைக்க எடுக்க பக்கெட் எடுத்துக் கொண்டு வரும்போது முத்துவின் கால் மீது பட்டு அவர் எழுந்து கொள்கிறார். அதோடு எப்ப பாத்தாலும் என்ன அடிச்சு தான் எழுப்புவியா என கேட்க நான் ஒன்னும் வேணும்னு அடிக்கல தெரியாம பட்டுடுச்சு என மீனா சொல்கிறார்.

பிறகு முத்து தன்னுடைய நண்பர்கள் பற்றியும் பார்ட்டி பற்றியும் பெருமையாக பேச மீனா கொக்கி மாத்தியாச்சா எனக்கு முத்து புரியாமல் முழிக்க செயின் கொக்கியை மாத்தியாச்சா என கேட்கிறார்.

மேலும் மீனா அந்த செயினை அடகு வைத்து தான் நீங்க சரக்கு அடிக்க பணம் கொடுத்து இருக்கீங்க என பேச முத்து நான் ஒன்னும் அப்படிப்பட்ட ஆள் கிடையாது என பதில் கொடுக்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. சும்மா அத பத்தியே கேட்டுட்டு இருக்காத என முத்து பாத்ரூமுக்குள் சென்று தப்பிச்சேன் டா சாமி என பெருமூச்சு விடுகிறார்.

இதையெல்லாம் கேட்ட அண்ணாமலை யோசனையில் உட்கார்ந்திருக்க மீனா துணியை துவைக்க போட்டுட்டு காபி போட்டு எடுத்துட்டு வரேன் என செல்கிறார். இந்த பக்கம் ரோகினி மனோஜை திருமணம் செய்து கொள்ள போவதாக தன்னுடைய தோழியிடம் சொல்ல அவர் உன்னை பற்றி எல்லா விஷயத்தையும் சொல்லிட்டியா என்று கேட்க முதலில் அவருக்கு என்ன பிடிக்குதானு பார்க்கலாம் அதுக்கப்புறம் எல்லாத்தையும் சொல்லலாம் என சொல்கிறார்.

இங்கே பார்வதி விஜயாவுக்கு போன் செய்து அந்த ஸ்டீல் கம்பெனி வீட்டு ஆட்கள் இன்றைக்கு மாப்பிள்ளை பார்க்க மூணு மணிக்கு உங்க வீட்டுக்கு வராங்க என சொல்ல விஜயா சந்தோஷப்படுகிறார். கடவுள் இருக்காரு என் புள்ள இந்த பூக்காரிய கட்டிக்கிட்டு இருந்தா பூவும் நாறுமா அவன் வாழ்க்கை நாசமா போயிருக்கும் இப்போ பெரிய வாழ்க்கையா அமைய போகுது என சந்தோஷமாக பேசி பிறகு மீனாவை கூப்பிட்டு இதெல்லாம் எல்லாத்தையும் தொடச்சி வை தரைய நல்லா மாப் போட்டு தொட முகம் தெரியணும்னு சொல்ல யார் முகம் தெரியணும் அத்தை என மீனா நக்கல் அடிக்கிறார்.

அதன் பிறகு மனோஜை கூப்பிட்டு குளிச்சிட்டு ரெடியாயிட்டு வா உன்ன மாப்பிள்ளை பார்க்க வராங்கனு சொல்ல அண்ணாமலை மனோஜை கூப்பிட்டு நீ எவ்வளவு சம்பளம் வாங்குற என கேட்க மனோ திருத்திரு என முழிக்க வேலை இருந்தால் தானே சம்பளம் கிடைக்கும் என சொல்கிறார். மனோஜ் அப்பா சொல்றது சரிதானே எனக்கு எதுக்கு இப்ப கல்யாணம் என கேட்க நீ ஏன்டா இப்படி எல்லாம் பேசுற நீ ஒரு பெரிய கம்பெனிக்கு முதலாளியாக போற என கூறுகிறார்.

பிறகு மனோஜ் உள்ளே போனதும் விஜயா அண்ணாமலையிடம் முத்துவ வர சொல்லுங்க அவங்க கிட்ட முத்துவும் மீனாவும் காதலிச்சாங்க அதனால கல்யாணம் பண்ணி வச்சுட்டோன்னு சொல்லுங்க, மனோஜ் ஓடிப்போன கதை எல்லாம் சொல்ல வேண்டாம் என சொல்ல அண்ணாமலை ஆரம்பமே பித்தலாட்டமா இருக்கு இது எங்க போய் முடிய போகுதோ என புலம்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.